கோவையில் குரு ராகவேந்திரா ஸ்வாமிகளின் 422வது ஜெயந்தி விழா
ADDED :3143 days ago
கோவை: கோவையில் உள்ள, ராகவேந்திரா சுவாமிகள் கோவிலில், நேற்று ஸ்வாமிகளின் 422வது ஜெயந்தி விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, 6:30 மணிக்கு கணபதி ஹோமம், 9:00 மணிக்கு பஞ்சாமிருத மஹா அபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.