தீர்த்தனகிரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை
ADDED :3143 days ago
புதுச்சத்திரம்: தீர்த்தனகிரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் 69 வது ஆண்டு மயானக்கொள்ளை நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரி அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை விழா நடப்பது வழக்கம். இந்த வருடம் 69 வது ஆண்டு உற்சவம் கடந்த 26 ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலாக்காட்சி நடந்தது. சிறப்பு விழாவான மயானக்கொள்ளை நேற்று நடந்தது. அதனையொட்டி அன்று காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 5.45 மணிக்கு மயானக்கொள்ளை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.