சுந்தரமூர்த்தி சுவாமி கோவில் திருப்பணிகள் நிறைவு விழா
ADDED :3148 days ago
உளுந்துார்பேட்டை: திருநாவலுாரில் சுந்தரமூர்த்தி சுவாமி கோவில் திருப்பணி நிறைவு விழா நடந்தது. திருநாவலுாரிலுள்ள சுந்தரமூர்த்தி சுவாமி கோவில் கருவறை, உள் மண்டபம், விமானம், முன்மண்டபம் உள்ளிட்ட திருப்பணி நிறைவு விழா நடந்தது. விழாவையொட்டி பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் மற்றும் வேள்வி வழிபாடு நடந்தது. பெரிய புராண சொற்பொழிவு ஆசிரியர் மோகன்ராசு வரவேற்றார். செங்கோல் ஆதீனம் 103 வது குரு மஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். மேலமங்கலம் யோகி ராமதாஸ் சுவாமிகள், திருமட குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், விஜயமங்கலம் சொக்கலிங்க சுவாமிகள், பவானி சிவனடியார் திருகூட்ட தலைவர் தியாகராசன் சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினர். திருநாவலுார் நரசிங்கன் நன்றி கூறினார்.