முத்துமாரியம்மனுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3143 days ago
தாரமங்கலம்: கோழிக்காட்டானுாரில், கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தாரமங்கலம், கோழிக்காட்டானுாரில், விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. அதையொட்டி, வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று, முத்துமாரியம்மன் கோவிலுக்கு, தீர்த்தக்குடங்கள் எடுத்து, ஊர்வலம் வந்தனர். மாலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன், முதற்கால யாக பூஜை நடந்தது. இரண்டாம் கால யாக பூஜைக்கு பின், இன்று காலை, 10:00 மணிக்குள், கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.