உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தீஸ்வரருக்கு இன்று கடலாடு உற்சவம்

காளஹஸ்தீஸ்வரருக்கு இன்று கடலாடு உற்சவம்

கும்மிடிப்பூண்டி;சுண்ணாம்புக்குளம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், இன்று, கடலாடு உற்சவம் நடைபெற உள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த, சுண்ணாம்புக்குளம் கிராமத்தில், பழமை வாய்ந்த ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம், மகம் நட்சத்திரத்தில், கடலாடு உற்சவம் மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம், இன்று நடைபெற உள்ளது. காலை, 6:00 மணிக்கு, கணபதி பூஜை, சுவாமிக்கு நவகலச பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறும். அதன் பின், காலை, 10:30 மணிக்கு மேல், கோவிலின் பின்புறம் உள்ள கடலோரத்திற்கு, பரிவார மூர்த்திகளுடன் சுவாமி சென்ற பின், கடலாடு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அங்கு, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்து, பிரசாதம் வழங்கப்படும். அதை தொடர்ந்து, மாலை சுவாமி திருவீதி உலா நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடலாடு உற்சவத்தில் பங்கேற்பர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !