உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உச்சிமாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உச்சிமாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உடுமலை :பூலாங்கிணறு உச்சிமாகாளியம்மன் கோவிலில் நடந்த, கும்பாபிஷே விழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை பூலாங்கிணறில் அமைந்துள்ள மகாகணபதி மற்றும் உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த, 8ம் தேதி காலை, விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், வேதிக அர்ச்சனை, பூர்ணாகுதி, நாடிச்சந்தனம், உபசார பூஜை செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க மகாகணபதி மற்றும் உச்சிமாகாளியம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேம் செய்யப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கணபதி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள், பூஜைகள் நடந்தன. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !