அழிந்து வரும் மன்னர் காலத்து கோட்டை
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மன்னர் காலத்து கோட் டை பராமரிப்பின்றி அழியும் நிலை உள்ளது. கிழக்குகடற்கரை சாலையில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட எல்லை கிராமம் சுந்தரபாண்டியபட்டினம். இங்கு, பழமை வாய்ந்த மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை உள்ளது. இடிந்த நிலையில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்தும், சுவர்கள் , கதவு, ஜன்னல்கள் சேதமடைந்தும் உள்ளன. பொதுமக்கள் கூறுகையில், சீமை கருவேல செடிகள் அடர்ந்துள்ளதால் பாம்புகள் அதிகம் உள்ளன. இதனால், அச்சப்பட்டு யாரும் கோட்டைக்குள் நுழைவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தொல்பொருள் துறையினர் பார்வையிட்டு சென்றனர். ஆனால் கோட்டையை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றனர். தொல்லியல் துறை ஆய்வாளர் ராஜகுரு கூறுகையில், கி.பி.14ம் நுாற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகவோ அல்லது சமணப்பள்ளியாகவோ இருக்கலாம். ஆய்வு செய்த போது எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறோம், என்றார்.