கந்தசுவாமி கோவிலில் இன்று திருக்கல்யாணம்
ADDED :3144 days ago
திருப்போரூர்: கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று, திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், கடந்த, 2ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. அன்றிலிருந்து, தொடர்ந்து நடைபெற்று வரும் விழா நாட்களில், ரதோற்சவம், தெப்போற்சவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன.இந்நிலையில், இன்று காலை திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. காலை, 7:30 மணிக்கு மேல், 9:00 மணிக்குள்ளாக நடைபெறும், இத்திருக்கல்யாண உற்சவத்தில், கந்தசுவாமி பெருமான் வள்ளியை மணம் முடிக்கும் வைபவம் நடைபெறும். பின், மாடவீதிகளில் நடைபெறும் சுவாமியின் திருவீதியுலாவுடன், பிரம்மோற்சவ விழா நிறைவுபெறும்.