மலைக்கோவிலில் சூரசம்ஹார விழா!
திருப்பூர் : கொங்கணகிரி ஸ்ரீகுழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று நடந்தது. திருப்பூர் மலைக்கோவில், ஸ்ரீகுழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா கடந்த 27ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனைகள் நடந்தன. சூரசம்ஹார விழாவையொட்டி, தினமும் காலை 11.00 முதல் 12.00 மணி வரை ஸ்நபன மஹன்யாசம் எனப்படும் மாலா மந்திர ஹோமம் நடந்தது. நேற்று காலை 7.00 முதல் 8.00 மணி வரை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சூரசம்ஹாரம் இரவு 8.00 மணிக்கு துவங்கியது. 8.30 மணிக்கு, சுவாமி வீதி உலா நடந்தது. கிழக்கு ரத வீதியில் கஜமுகசூரன் வதம், தெற்கு ரத வீதியில் வீரபாகு பானுகோபனை வதம் செய்தல், மேற்கு ரத வீதியில் சிங்கமகாசூரன் வதம், வடக்கு ரத வீதியில் மஹாசூரன் வதம் நடந்தது. இன்று காலை 7.00 முதல் 8.30 மணி வரை, ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.