உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி ஆசைந்து வலம் வந்த குன்றத்து தேர்

ஆடி ஆசைந்து வலம் வந்த குன்றத்து தேர்

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இன்று (மார்ச் 18) தீர்த்த உற்சவம் நடக்கிறது. முன்னதாக காலையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, பெரிய வைரத்தேரில் எழுந்தருளினர். காலை 6:39 மணிக்கு புறப்பட்ட தேர், ஐந்து மணிநேரம் கிரிவலப் பாதையில் சென்று, காலை 11:45 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது.பின்னர் கோயில் நடை திறந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவில் சுவாமி தங்க மயில் வாகனத்தில் அருள்பாலித்தார். இன்று தீர்த்த உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !