பழநி காளிகாம்மாள் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3123 days ago
பழநி, பழநி அடிவாரம் தெற்குகிரிவீதியில் உள்ள காளிகாம்மாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மார்ச் 14ல் கணபதி ஹோமம், திருமஞ்சனம் கொண்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம், முதல்கால யாகபூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஆறுகால யாகபூஜைகளும், மார்ச் 16ல் கோயில் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவர்காளிகாம்பாள், சுந்தர விநாயகர், சந்தனகருப்பணசாமி உள்ளிட்ட பரிவாரதெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பழநி டவுன் விஸ்வ பிராமண மகாஜன சங்கத்தினர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.