உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறுமுக சுவாமி கோவிலில் வரும் 26ல் சூரிய பூஜை

ஆறுமுக சுவாமி கோவிலில் வரும் 26ல் சூரிய பூஜை

திருத்தணி: கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், வரும், 26 முதல், 28ம் தேதி வரை சூரிய பூஜை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி நந்தி ஆற்றங்கரை ஓரம் அமைந்து உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி மாதம் மூன்று நாட்கள் சூரிய பூஜை நடக்கிறது.அந்த வகையில், நடப்பாண்டிற்கான சூரிய பூஜை, வரும், 26 முதல், 28ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள், சூரிய ஒளி கதிர்கள், மூலவர் முருகப்பெருமான் திருப்பாதம் மீது விழும்.இரண்டாம் நாள், சூரிய ஒளி கதிர்கள், திருமேனி மீதும், மூன்றாம் நாள், சிரசின் மீதும் சூரிய ஒளி விழும்.அந்த நேரத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடத்தப்படும். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !