உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொலுவிருத்தல்

கொலுவிருத்தல்

அரசர்கள், சமயத் தலைவர்கள் முதலானோர் நமது ஆற்றலையும், செல்வாக்கையும் பறைசாற்றும் வண்ணம் சகல பரிவாரங்களுடன் வீற்றிருக்கும் நிலையே கொலு
என்பதாகும். அரசன் தனது மந்திரி, சேனைத்தலைவர்கள் முதலானவர்கள் புடை சூழ அரசனுக்குரிய மணிமகுடம் புனைந்துச் செங்கோலேந்திச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் காட்சியே கொலுக்காட்சி எனப்படும். இதற்கென அமைந்த பெரிய மண்டபமே கொலு மண்டபம் என்றழைக்கப்படுகிறது.

தெய்வங்கள் தமது பரிவாரங்களுடன் எழுந்தருளி இருக்கும் காட்சியும் கொலுக்காட்சியாகும். திருமடங்களில் குருபூசை  நன்னாளில் குரு மகாசன்னிதானங்கள் தமது சீடர்கள், பணியாளர்கள், புலவர்கள், சமயச் சான்றோர்களுடன் கூடியிருந்து அருளும் காட்சி கொலுக்காட்சி எனப்படும். நவராத்திரியின் போது அரண்மனைகளில் உள்ள கொலு மண்டம் நன்கு அலங்கரிக்கப்பட்டு அரசர்கள் அந்நியர் மீது படையெடுத்து வெற்றி பெற்ற போது பெற்ற பரிசில்களைக் காட்சிக்கு வைப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !