நானும் ஒரு பரதேசிதான்!
ரமணாசிரமத்தில் ஜயந்தி விழா. உலகின் பல பகுதிகளிலிருந்தும் கற்றறிந்த மேதைகளும், பெரும் பணக்காரர்களும் அன்று அங்கே கூடியிருந்தனர். அருகிலேயே, உள்ளூர் பரதேசிகளும் ஒருபுறம் அமர்ந்திருந்தனர். அப்போது ஆசிரமத்தில் உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைக்கேட்ட பரதேசிகள் உணவுக் கூடத்தை நோக்கி ஓட, பரதேசிகளுக்கு பின்புறம் இலை போடப்பட்டுள்ளது. இது பெரிய மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம். அதனால், பரதேசிகள் அங்கே செல்லுங்கள் என்று அதிர்ந்த குரலில் கூறினார்கள்.
சற்று நேரம் கழிந்தது. பெரிய மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில், ரமணரின் வருகைக்காக செல்வந்தர்களும் மேதைகளும் காத்திருந்தனர். ஆனால், ரமணரைத்தான் காணோம். சிறிது நேரத்துக்கு முன் இங்குதானே இருந்தார். எங்கு சென்றார்? என்று அவரது அடியார்கள் தேடியபோது, ரமணர் பரதேசிகள் அமர்ந்திருந்த சாப்பாட்டு பந்தியில் அமர்ந்திருந்தார்.
அவரது அருகில் சென்று பவ்யமாக விசாரித்தபோது, பரதேசிகள் எல்லோரையும் இங்கே உட்காரும்படி சொன்னார்கள். அதனால்தான் இங்கு உட்கார்ந்தேன் என்றார். ரமண மகரிஷியைப் பொறுத்த வரை தாம் ஒரு பரதேசி என்ற எண்ணமே அவருக்கு எப்போதும் உண்டு.