வரமான வியாசர் சாபம்
இமயமலைச்சாரலில் வேதங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தார் வியாசர். அப்போது தேவலோக சிறுமி ஒருத்தி தன் தோழிகளுடன் அங்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் அடிக்கடி சிரித்து துள்ளிக்குதித்து அங்குமிங்கும் ஓடினாள். அது வியாசருக்கு இடையூறாக இருக்கவே, கண்டித்தார். அப்படியும் அந்த சிறுமி தோழிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடவே கோபமுற்ற வியாசர், நீ பூமிக்குள் மறைந்துபோவாய் என்று சபித்தார். அவள் வியாசரிடம் சாபவிமோசனம் கேட்க, நீ பூமிக்குள் மறைந்தாலும் நதியாக மாறி மக்களைப் புனிதப்படுத்துவாய். தேவரூபமாகவும் மாறி கல்விச் செல்வத்தையும் அளிப்பாய். தக்க வயதடைந்ததும் சரஸ்வதி என்று உன்னை எல்லாரும் போற்றுவர் நானே உன்னை வணங்கும் காலம் வரும். என் சாபம் உனக்கு வரம் என்று அருளியதாக வியாச புராணம் கூறுகிறது. பூமிக்குள் நதியாக மாறிய இந்த சிறுமிதான் சரஸ்வதி நதி. அலகாபாத் திரிவேணியில் கங்கை, யமுனை நதிகள் கூடும் இடத்தில் அந்தர்வாகினியாக வந்து சங்கமமாகிறாள் எனப்படுகிறது.