உலகெங்கும் சரஸ்வதி
ADDED :3516 days ago
இந்தியாவில் பல இடங்களில் சரஸ்வதி போற்றப்படுவதுபோல், வெளிநாட்டிலும் சரஸ்வதி போற்றப்படுகிறாள். திபெத் நாட்டினர் யங்சனம் என்றும், மாலத்தீவு பகுதியில் கலுங்கன் என்றும், ஜப்பான் நாட்டில் பெண்டன் என்றும், கிரேக்கர்கள் அதீனே என்றும், ரோமானியர் மினர்வா என்றும் சரஸ்வதியை போற்றுகிறார்கள். சமணர்கள் சரஸ்வதியை சுருதி தேவி என்றும்; பவுத்தவர்கள் மகாசரஸ்வதி வஜ்ரசாரதா, ஆர்ய சரஸ்வதி வஜ்ரவீணா தாரா, வஜ்ரசரஸ்வதி என்றும் போற்றி வழிபடுகிறார்கள்.