உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலாசுர பயங்கரி

கோலாசுர பயங்கரி

லட்சுமி சாந்த சொரூபினியாக இருந்தாலும் ஒருமுறை கோலாசுரன் என்பவனை வதம் செய்ததாக புராணம் கூறுகிறது. மகாராஷ்டிராவில் கோலாப்பூர் என்ற தலத்தில் இருக்கும் லட்சுமி கோயில் மிகவும் பழமையானது இங்கு அருள் புரியும் லட்சுமியை கோலாசுரபயங்கரி என்று போற்றுவர். நாமங்கள் பல கல்வி, கலை, ஞானம் அளிக்கும் சரஸ்வதிக்கு பல பெயர்கள் உண்டு. வாணி, கலைமகள், பாரதி, நாமகள், ஞான அமலி, ஞானப்பிராட்டி, வாக்கின் இறைவி, கமலவல்லி, நாவுக்கரசி, நாமடந்தை வாக்தேவி, சகலகலாவல்லி, கலைத்திருமடந்தை, இசைமடந்தை, வாக்வாதினி, வித்யாதேவி, சாரதா, சொற்கிழத்தி, சொற்கலையாள், வாகீஸ்வரி, சின்மயி, சியாமளா என்று பல பெயர்களால் சரஸ்வதியைப் போற்றுகின்றனர். மேலும், ரிக்வேதம் மேதா சரஸ்வதியே உலகின் ஆதிகாரணி என்று கூறி, வாகீஸ்வரி சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி என்று எட்டுவிதமான சரஸ்வதி வடிவங்களைப் போற்றுகின்றது. நான்முகனால் போற்றப்படும் சரஸ்வதிக்கு காயத்ரி, பிராமணி சாவித்ரி என்ற பெயர்களும் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !