உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலோச்சும் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹார விழா!

கோலோச்சும் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹார விழா!

துறையூர்: துறையூர் கோலோச்சும் முருகர் கோவிலில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்ச்சியில் போலீஸ் எஸ்.பி., லலிதாலட்சுமி பங்கேற்று வழிபட்டார்.திருச்சி மாவட்டம், துறையூரில்உள்ள சுயம்பு கோலாச்சும் முருகர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 26ம் ÷ ததி காலை ஆறு மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவ ங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் அபிஷேக ஆராதø ன கந்தசஷ்டி பாராயணம் நடந்தது. கடந்த மாதம் 30ம் தேதி மாலை 6 மணிக்கு பராசக்தியிடம் சுயம்பு கோ லோச்சும் முருகர் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியின் போது முருகப்பெருமானுக்கு முக த்தில் முத்துமுத்தாக வியர்வை அமிர்தமாக கொட்டுவது இக்கோவிலின் சிறப்பு என பக்தர்கள் கருதுகின்றனர். அடுத்த நாள் இரவு 8 மணிக்கு பத்மசூரனை முருகர் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் நிறுவனர் ஜானகிராம் சுவாமிகள் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., லலிதாலட்சுமி தன் பெற்றோருடன் பங்கேற்று வழிபட்டார்.நேற்று பகலில் சுவாமி திருக்கல்யாணம், அன்னதானம், இரவு சுவாமி பள்ளியறைக்கு செல்லும் வைபவம் நடந்தது. இன்று 2ம்தேதி காலை சுவாமி திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !