உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியமணலி கரிய காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கோலாகலம்

பெரியமணலி கரிய காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கோலாகலம்

பெரியமணலி: பெரியமணலி, கரிய காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா, நாளை கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம், வையப்பமலை அடுத்த பெரியமணலியில், பிரசித்தி பெற்ற கரிய காளியம்மன் கோவில், நாகேஸ்வரர், வேணுகோபால், பெரிய மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்தாண்டு தேர்த்திருவிழா, கடந்த, 14ல் மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதலுடன் துவங்கியது. 21ல், கரிய காளியம்மனுக்கு, பூச்சாட்டல், 24ல் கிராம சாந்தி, 25ல், கொடியேற்றம் நடந்தது. இன்று இரவு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மார்ச் 29), காலை, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மாலை, 4:00 மணிக்கு, கரிய காளியம்மன் திருத்தேர், 30ல், மாலை, 4:00 மணிக்கு, மாரியம்மன் திருத்தேர், 31ல், மாலை, 4:00 மணிக்கு, சிவன், பெருமாள் திருத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு, 10:00 மணிக்கு, புஷ்பரதத்தில், சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏப்., 1, நள்ளிரவு, 12:00 மணிக்கு சத்தாபரணம், மின் விளக்கு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா, வாண வேடிக்கை நடக்கிறது. ஏப்., 2ல், காலை, 9:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !