ஏப்.2ல் சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி அவதார பெருவிழா
மதுரை:மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமியின் 67 வது அவதார பெருவிழா ஏப்.,2ல் நடக்கிறது.இம்மடத்திற்கு பாரதி தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி ஆகியோர் நேற்று முன்தினம் வந்தனர். நேற்று காலை 7:30 மணிக்கு சாரதா சந்திர மவுலீஸ்வர பூஜையை நடத்தினர். காலை 10:00 மணிக்கு பாத பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 6:00 மணிக்கு பக்தர்களுக்கு சுவாமிகள் தரிசனம் தந்தனர். இரவு 8:00 மணிக்கு சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடந்தது. சுவாமியின் 67 வது அவதார விழா சிறப்பாக நடக்கிறது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு விழா துவங்குகிறது. காலை 9:00 மணிக்கு சண்டீ பாராயணம். காலை 11:00 மணிக்கு சாரதாம்பாளுக்கு சிறப்பு பூஜை. மதியம் 12:00 மணிக்கு மகாருத்ர மகாயாகம். மாலை 6:30 மணிக்கு குருவந்தனம் போன்ற நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி ஆகியோர் ஆசியுரை நிகழ்த்துகின்றனர். ஏற்பாடுகளை தர்மகாரியதரசி சங்கர நாராயணன், பொறுப்பாளர் சீனிவாச ராகவன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.