மலையாண்டவர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :3116 days ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் என்கிற மலையாண்டவர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. நிகழ்ச்சியில் நெய்வேலி சிவனடியார் திருக்கூட்டத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் சிவத்திரு முருகப்பன் தலைமையில் திருவாசகப்பாடல்களை பாடினர். இதில் 30க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு பாடல்களை பாடினர்.