பெரியமாரியம்மன் கோவில் கம்பத்துக்கு பாக்கெட் பால் ஊற்ற வேண்டாம்
ADDED :3116 days ago
ஈரோடு: கோவில் கம்பத்தில் வீசப்படும் பால் கவர்களால் துர்நாற்றம் ஏற்படுவதால், பாத்திரத்தில் பால் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் கம்பம் போடப்பட்டுள்ளது. இக்கம்பங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீர்த்தம் மற்றும் பால் கொண்டு வந்து ஊற்றுகின்றனர். இதில் பலர் கோவில் அருகே உள்ள கடையில் பாக்கெட் பாலை வாங்கி, கம்பத்தில் ஊற்றுவதோடு, பால் கவரை கம்பத்தின் மீதே வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனால், கோவில் வாளகத்தில் உள்ள கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பால் ஊற்ற வரும் பக்தர்கள், பாத்திரத்தில் பால் எடுத்து வர வேண்டும் என, கோவில் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.