காந்தகிரி மலைக்கோவிலில் பங்குனி உத்திரம்
ADDED :3176 days ago
ஆர்.கே.பேட்டை: காந்தகிரி மலைக்கோவிலில், வரும், 9ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவில், சுவாமிக்கு, காலையில் திருக்கல்யாணமும், இரவு கிரிவலமும் நடக்கிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, சுந்தரராஜபுரம் கிராமத்தின் வடக்கே, காந்தகிரியில் அமைந்துள்ளது, அன்னபூரணி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில். இங்கு, பிரதோஷம், நித்யபூஜைகள் நடந்து வருகின்றன. எக்னாபுரம், சுந்தரராஜபுரம், மோசூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபடுகின்றனர். வரும், 9ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவில், காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இரவு, 8:00 மணிக்கு கிரிவலம் புறப்படுகிறது. மேலும், உற்சவர் பெருமான் சிலை அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, பக்தர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.