பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3220 days ago
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, துக்கியாம்பாளையம், பாலதண்டாயுதபாணி கோவில், 40 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, மஹா கணபதி, பிரம்மா, தட்சணாமூர்த்தி, சிவதுர்க்கை சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதன் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. அதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பெண் பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது.