பாதமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3220 days ago
ஜலகண்டாபுரம்: பாதமாரியம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஜலகண்டாபுரம், ஆட்டுக்காரன் வளவு, பாதமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி, 108 திருவிளக்கு பூஜை மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.