கூடலுார் சிக்கம்மன் கோவில் தேர் திருவிழா
ADDED :3115 days ago
கூடலுார்: மசினகுடி, மாயார் சிக்கம்மன் கோவில் தேர் திருவிழா, சிறப்பாக நடந்தது. மசினகுடி, மாயார் பகுதியில் அமைந்துள்ள சிக்கம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 31ல், கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன. நேற்று முன்தினம், இரவு, 9:30 மணிக்கு, மின் விளக்கு மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், சிக்கம்மன் வீதி உலா ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம், அதிகாலை 3:00 மணிக்கு நிறைவு பெற்றது. தொடர்ந்து, நேற்று பகல், 12:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கோவில் திருவிழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகாளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.