உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸம்பத்ஸ்தர உற்சவம்

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸம்பத்ஸ்தர உற்சவம்

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸம்பத்ஸ்தர உற்சவத்தையொட்டி, உற்சவர் பெருமாள் உபயநாச்சியாருடன் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு விழா, ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸம்பத்ஸ்தர உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை 8:00 மணிக்கு நித்ய ஹோமம், 30 ஆயிரம் ஆவர்த்தி ஹோமம், காலை 10:00 மணிக்கு பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 12:00 மணிக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள்,  உபய நாச்சியாருடன் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !