உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெப்பக்குளம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா: ஏப்.13ல் கோலாகலம்

தெப்பக்குளம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா: ஏப்.13ல் கோலாகலம்

மதுரை:  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஏப்.,13ல் நடக்கிறது. அன்று மாலை 6:00 மணிக்கு மாரியம்மன் மின் அலங்கார பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி, மாசிவீதிகள், வடக்கு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வந்து சேரும். பின் மாரியம்மனுக்கு பூச்சொரிதல், தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர். பசலி உற்சவம்: ஏப்.,16 முதல் 26 வரை பசலி உற்சவம் நடப்பதால் ஏப்.,16 மாலை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் வந்து சேர்ந்த பின் கொடியேற்றம் நடைபெற்று உற்சவம் ஆரம்பமாகிறது. ரத உற்சவம் ஏப்.,25ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !