உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பனமரத்துப்பட்டி: மாரியம்மன் கோவில் விழாவில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். நாழிக்கல்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று அதிகாலை, துர்க்கை அம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை, 11:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பெண்கள், முக்கிய வீதிகள் வழியாக பால் குடம் எடுத்து வந்து, மாரியம்மனுக்கு அபி?ஷகம் செய்தனர். மதியம், மாரியம்மன் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தனர். மாலையில், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள், மாரியம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !