உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவில் தேருக்கு ராட்சத சக்கரம், அச்சுகள் வருகை

சுகவனேஸ்வரர் கோவில் தேருக்கு ராட்சத சக்கரம், அச்சுகள் வருகை

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவில் தேருக்கு, பெல் தொழிற்சாலையில் இருந்து, ராட்சத சக்கரம், அச்சுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. சேலம், சுகவனேஸ்வரர் கோவிலுக்கு, புதிய தேர் வடிவமைக்க, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டு, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. அப்பணியை, தம்மம்பட்டியை சேர்ந்த பால்ராஜ் செய்து வருகிறார். அதில், தேருக்கு இரும்பு சக்கரம், அச்சுக்கள் செய்ய, ஒன்பது லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. முன்தொகை, மூன்று லட்சம் ரூபாயை, திருச்சியில் உள்ள, பெல் தொழிற்சாலைக்கு, காசோலையாக வழங்கப்பட்டது. அங்கு சக்கரம் மற்றும் அச்சுக்கள் தயாரிக்கும் பணி நடந்தது. தற்போது, அப்பணி முடிந்து, சக்கரம் மற்றும் அச்சுக்கள், சுகவனேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு, கோவில் பின்புறம், தேர் வடிவமைக்கும் பணி, முழுவீச்சில் நடக்கிறது. இதனால், வைகாசி விசாகத்தின்போது, தேரோட்டம் நடக்கும் என, தெரிகிறது. இதுகுறித்து, தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறியதாவது: ஓராண்டாக, தேர் செய்யும் பணியில், 15க்கும் மேற்பட்டோர் ஈடுபடுகிறோம். தற்போது, 70 சதவீத பணி முடிந்துள்ளது. இரும்பு சக்கரங்கள், அச்சுகள், விரைவில் பொருத்தப்படும். வைகாசிக்குள், அனைத்து பணிகளும் முடிவடையும். இத்தேர், வைகாசி விசாகத்தின்போது பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !