உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்த யாத்திரை துறவியர் காவிரிக்கு சிறப்பு பூஜை!

தீர்த்த யாத்திரை துறவியர் காவிரிக்கு சிறப்பு பூஜை!

மேட்டூர்: அகில பாரதீய துறவியர் சங்கம் சார்பில், காவிரி தீர்த்த யாத்திரை மேற்கொண்டுள்ள துறவியர்கள் நேற்று, மேட்டூரில் காவிரிக்கு தீபாராதனை காட்டி, சிறப்பு பூஜை செய்தனர்.கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதரமாக திகழும் காவிரியின் புனித தன்மையை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அகில பாரதீய துறவியர் சங்கம் சார்பில், அன்னை காவேரி தீர்த்த யாத்திரை அக்டோபர் 23ம் தேதி தலைகாவிரியில் துவங்கியது. துறவி ராமானந்தா தலைமையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 30 சன்னியாசிகள், ஐந்து பிரம்மச்சாரிகள், ஐந்து சேவர்கள் அடங்கிய துறவியர் குழுவினர் நேற்று மாலை மேட்டூர் காவிரி படித்துறையில் காவிரி அன்னைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி அன்னையை வழிபட்டனர். துறவியர்கள் பவானி, கொடுமுடி, திருஈங்கோய்மலை, ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் காவிரிக்கு ஆராதனை நடந்தி வழிபாடு செய்கின்றனர். நவம்பர் 11ம் தேதி பூம்பூகாரில், காவிரிக்கு சிறப்பு பூஜை நடத்தி, தீர்த்த யாத்திரையை நிறைவு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !