உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணத்தின் மீதான பாசம் குறையட்டும்!

பணத்தின் மீதான பாசம் குறையட்டும்!

பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய சிலர் தயாராகி விட்டனர். கொலை, கொள்ளை, ஏமாற்றிக் கூட சம்பாதிப்பவர்கள் உண்டு. கல்வி கூட, சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அப்படி கிடைக்கும் பணத்தில், குடி, விபசாரம் போன்ற தடுக்கப்பட்ட வழிகளில் செல்கிறார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சாட்டிங்’ என்ற பெயரில் ஆணும், பெண்ணும் சீரழிகிறார்கள். இறுதியில், பல நோய்களுக்கு ஆளான பிறகு, இறைவா! என்னைச் சோதித்து விட்டாயே’ என்று கதறுகிறார்கள்.  குர் ஆனில், மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ, அதன் (பணம்) காரணமாக தரையிலும், கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. உண்மையில் இறைவன் மனிதர்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள்,’’ என்று சொல்லப்பட்டுள்ளது. மனிதனுக்கு இறைவன் பணம் உள்ளிட்ட அருட்கொடை வழங்கினால், இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்’ என்கிறான். வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால்,  இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்கிறான்.  பணத்தின் மீதான பற்றைக் குறைத்துக் கொண்டால், பல பிரச்னைகளில் இருந்து தப்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !