ஜெயின் சங்கத்தினர் இலவச மோர்
ADDED :3117 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சங்கத்தினர் இலவச மோர் வழங்கினர்.கள்ளக்குறிச்சி எஸ்.எஸ்., ஜெயின் சங்கம் சார்பில் மகாவீர்
ஜெயந்தி விழா கொண்டாடினர். விழாவையொட்டி, சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி பிரார்த்தனை நடத்தினர். பின்னர் நான்குவழிச்சாலையில் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு
மோர் வழங்கினர்.