உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேர்மை மிக்க பெரியவர்!

நேர்மை மிக்க பெரியவர்!

பெரியவர் ஒருவர் தன் நண்பர்களுடன், வேலுõர் மாவட்டம், காங்கேய நல்லுõரில் இருந்து (83 கி.மீ.) நடந்து திருவண்ணாமலைக்கு யாத்திரை சென்றார். அந்த சமயம் வேலுõரைச் சுற்றி காலரா பரவிக்கொண்டிருந்தது. திருவண்ணாமலையில் நோய்  பரவாமல் இருக்க, நோய் பரவிய ஊர்க்காரர்கள்திருவண்ணாமலைக்குள் நுழையக்கூடாதென, சுகாதார துறை அனுமதி மறுத்தது. காங்கேயநல்லுõரில் இருந்துவந்தவர்களோ, தாங்கள் அரக்கோணத்தில் இருந்துவருவதாகச் சொல்லி விட்டு திருவண்ணாமலைக்குச் சென்றனர். ஆனால், பெரியவர் மட்டும்,நான் காங்கேயநல்லுõர்க்காரன் என்ற உண்மையைச் சொன்னதால்அனுமதி மறுக்கப்பட்டார். அந்த இடத்திலேயே, அண்ணாமலையானுக்கு அரோகரா என்று சொல்லி வணங்கி விட்டு ஊர் திரும்பினார். நேர்மையான நெஞ்சம் கொண்ட பெரியவர் வேறு யாருமல்ல!வாரியார் சுவாமிகளின் தாத்தா சாமியண்ணா தான். ஆண்டுதோறும் அண்ணாமலை தீபம் தரிசிக்கும் அவர், பொய் சொல்ல விரும்பாமல் ஊர் திரும்பியதுகுறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !