காளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
ADDED :3106 days ago
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, காளியாகோவில்புதூரில் காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் நிலம் சம்பந்தமாக, இரு தரப்பினர் இடையே, பிரச்னை எழுந்ததால், கடந்த ஆண்டு பங்குனி திருவிழாவை நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா நடத்த, அனுமதி வழங்கும்படி, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் காளியம்மன் திருவிழா நடத்த அனுமதி வழங்கியதால், கடந்த, 7ல் பூச்சாட்டுதலுடன் விழா
துவங்கியது. வரும், 12ல் பொங்கல் வைத்தல், 13ல் கிடா வெட்டி நேர்த்திக் கடன் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.