கோயில் அர்ப்பணிப்பு விழா
ADDED :3103 days ago
ராஜபாளையம்:ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோயிலை சிருங்கேரி பீடாதிபதிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ராம்கோ குரூப் சோ்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, துணை சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, ராமசுவாமிராஜா, ஸ்ரீகண்டன் ராஜா குடும்பத்தினர் கோயில் ஆவணங்களை பீடாதிபதிகளிடம் சமர்ப்பித்தனர் .இதன் பின் மாலையில் ஸ்ரீஸ்ரீ சந்திரசேகர பாரதீ
மகாசுவாமிகளின் வரலாற்று நூல் மற்றும் ராம்கோ குரூப் சேர்மன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி கவுரி சங்கர் ,பீடாதிபதிகளிடம் வழங்கினார்.