உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்திராயிருப்புக்கு ஏப். 14ல் சிருங்கேரி மடாதிபதி வருகை

வத்திராயிருப்புக்கு ஏப். 14ல் சிருங்கேரி மடாதிபதி வருகை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிருங்கேரி மடாதிபதிகள் ஏப். 14 ல் வத்திராயிருப்பு வருகை தர உள்ளனர். வத்திராயிருப்பில் உள்ள பக்தர்களுக்கு ஆசி, சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டி சிருங்கேரி சாரதாபீட மடாதிபதிகள் ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகள், ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகளிடம் இப்பகுதி மக்கள் நீண்ட ஆண்டாக கோரி வந்தனர். இந்நிலையில் ராஜபாளையம் சிருங்கேரி மட கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வந்த சுவாமிகளிடம் பக்தர்கள் வத்திராயிருப்பு வருமாறு கோரினர். இதை ஏற்றுக்கொண்ட சுவாமிகள் ஏப். 14, 15ல் வருவதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வத்திராயிருப்பில் நடுஅக்கிரஹாரம் ஸ்ரீராமமூர்த்தி சுவாமிகள் பஜனை மடம், பிராமண சமுதாய கல்யாணமகாலில் கடந்த இருநாட்களாக சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடு, பூரணகும்ப மரியாதையுடன் சுவாமிகளை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதல்நாள் நிகழ்ச்சியில் அவருக்கு பக்தர்களின் சார்பில் பாதபூஜை, பூரணகும்ப வரவேற்பு நிகழ்ச்சி, பக்தர்களுக்கு அருளாசி வழங்குதல், சொற்பொழிவு நடக்கிறது. மறுநாள் சந்திரமவுலீஸ்வர பூஜை, பிஷாவந்தனம் நடக்கிறது. ஏற்பாடுகளை பக்தசபா நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !