ஐயப்பா ஆசிரமத்தில் சித்திரை விஷூ கனி தரிசனம்
ADDED :3103 days ago
சூரமங்கலம்: ஐயப்பா ஆசிரமத்தில், விஷூ கனி தரிசனம் நடந்தது. தமிழ் புத்தாண்டு முன்னிட்டு, சேலம் - பெங்களூரு பைபாஸ் சாலையில், குரங்குச்சாவடி அருகே உள்ள ஐயப்பா ஆசிரமத்தில், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மகா கணபதி ஹோமம்
நடந்தது. 5:00 மணிக்கு, ஐயப்ப சுவாமிக்கு, அபிஷேகம், கனி தரிசன மகா தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பகவதி சேவை, 8:30 மணிக்கு அத்தாழை பூஜை, பக்தர்களுக்கு கனி வழங்குதல், 10:00 மணிக்கு ஹரிவராசனம் நடந்து, நடை சாத்தப்பட்டது. இதில், காலை முதலே, ஏராளமான பெண்கள், குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சித்திரை விஷூ கனி தரிசனம் முன்னிட்டு, கோவில் கருவறையைச் சுற்றிலும், பல்வேறு வகை பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.