உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை ஏசு பேராலயத்தில் சிலுவை பாதை வழிபாடு

குழந்தை ஏசு பேராலயத்தில் சிலுவை பாதை வழிபாடு

சேலம்: ஏசு பேராலயத்தில், சிலுவை பாதை வழிபாடு நடந்தது. ஏசு  கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்தியாகம் செய்த நாளை, புனித வெள்ளியாக, உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். நேற்று, சேலம், நான்கு ரோடு குழந்தை
ஏசு பேராலயத்தில், பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமையில், சிலுவை பாதை நிகழ்ச்சி நடந்தது. அதில், ஏசு வேடமிட்டு, சிலுவையை சுமந்தபடி, 14 நிலைகளில், அவர் துன்புறுத்தப்பட்ட நிகழ்வுகளை, நினைவுகூர்ந்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள்
நடந்தன. அதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். மேலும்,  மூன்றாம் ஆண்டாக, புனித வின்சென்ட் பே பவுல் சபை சார்பில் நடந்த ரத்த தான முகாமை, சேலம் சட்ட ஒழுங்கு துணை கமிஷனர் ஜோர்ஜி ஜார்ஜ் துவக்கி வைத்தார். இதில், சபை தலைவர் பீட்டர், சரவண பவன் நிர்வாக இயக்குனர் சிவராமன், ரெட்கிராஸ் செயலர் சகாயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோல், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள  சி.எஸ்.ஐ., பேராலயம், அஸ்தம்பட்டி இம்மானுவேல் ஆலயம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம்,
செவ்வாய்ப்பேட்டை புனித மரியன்னை ஆலயம் உள்பட பல்வேறு  கிறிஸ்தவ பேராலயங்களில், புனித வெள்ளி நாள்  அனுசரிக்கப்பட்டது. ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் சண்டே, நாளை அனுசரிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !