திருப்பாதிரிப்புலியூர் கோவிலில் ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்
ADDED :3120 days ago
கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் ராமானுஜர் 1000வது நட்சத்திர வைபவம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜ பெருமாள், ராமானுஜர், மணவாள மாமுனிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 9:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை மற்றும் வேத பாராயண, அருள்செயல் கோஷ்டி சேவித்தல் நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜ பெருமாள் தங்க கருடசேவை, ராமானுஜர் சேஷவாகனத்தில் எதிர்சேவை மற்றும் வேதபாராயண கோஷ்டியுடன் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில், ஜீயர்கள் சோளசிம்ஹபுரம் கந்தாடை சண்டமாருதம் குமார தொட்டையார்ய சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஆச்சார்யார் ஜீயர் சுவாமிகள் பத்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.