உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தான வேணுகோபால சுவாமி கோவில் பிரம்மோற்சவம் நிறைவு

சந்தான வேணுகோபால சுவாமி கோவில் பிரம்மோற்சவம் நிறைவு

ஆர்.கே.பேட்டை : கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்த, சந்தான வேணுகோபால சுவாமி கோவில் சித்திரை பிரம்மோற்சவம், நேற்று முன்தினம், பந்து விளையாடல் மற்றும்
சக்கர ஸ்தானத்துடன் நிறைவு பெற்றது. ஆர்.கே.பேட்டை அடுத்த, எஸ்.வி.ஜி.புரம், சந்தான வேணுகோபாலபுரம் கோவிலில் நடந்து வந்த பிரம்மோற்சவம், நேற்று முன்தினம், பந்து விளையாடல் மற்றும் சக்கர ஸ்தானம் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. காலை
10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பந்து விளையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து சக்கர ஸ்தானம் நடைபெற்றது.மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் உள் புறப்பாடு எழுந்தருளினார். அத்துடன், பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. பத்து நாட்கள் திருவிழாவை ஒட்டி, எஸ்.வி.ஜி.புரம், எஸ்.பி.கண்டிகை, சமத்துவபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட
கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய, தினசரி வந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !