வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.7.22 லட்சம் காணிக்கை
ADDED :3110 days ago
மாமல்லபுரம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில், 7.22 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. இக்கோவிலலில், கடந்த ஆண்டு டிச., 29
முதல், நேற்று வரை, பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கையை கணக்கிட, நேற்று, அவை திறக்கப்பட்டன. துணை ஆணையர் மு.விஜயன், ஆய்வாளர் கோவிந்தராஜ், தக்கார்
நற்சோணை, செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலையில், திறந்து கணக்கிடப்பட்டன. அதில், ஏழு லட்சத்து, 22 ஆயிரத்து, 776 ரூபாய்; 70 கிராம் தங்கம்; 123 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.