உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலூர் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கூடலூர் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கூடலூர்: கூடலூர் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்  நடந்தது. முன்னதாக, சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சோமகும்ப பூஜை உள்ளிட்ட யாக சாலை பூஜை
நடந்தது. யாகசாலை பூஜை நேரங்களில் வேதம் மற்றும் திருமுறை பாராயணம் நடந்தது. கும்பாபிஷேகத்தை உமாமகேஸ்வர சிவாச்சாரியார், ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகர்
செய்தனர். கும்பாபிஷேகதிற்குப்பின் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அங்கணன் பூசாரி வகையறா மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !