சந்தானபுஷ்கரணியில் வலம் வந்த பெருமாள்
பொன்னேரி: சந்தான புஷ்கரணி திருக்குளத்தில் நடந்த தெப்போற்சவத்தில், ஹரிகிருஷ்ண பெருமாள் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பொன்னேரி, திருவாயற்பாடி ஹரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், கடந்த, 10ம் தேதி முதல், பிரம் மோற்சவ விழா நடை பெற்று வருகிறது. தங்கமுலாம் தொட்டி, சிம்ம வாகனம், சூரிய பிரபை , சந்திர பிரபை, அனுமந்த வாகனம், புன்னவாகனம், சேஷ வாகனம், அன்ன வாகனம் என, தொடர்ந்து உற்சவங்கள் நடை பெற்றன. கடந்த, 16ம் தே தி நள்ளிரவு, பொன்னேரி அகத்தீஸ்வரர் – ஹரிகிருஷ்ணபெருமாள் சந்திப்பு திருவிழாவும், 18ல், தேரோட்டமும் வெகு விமரிசையாக நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, தெப்போற்சவ விழா நடை பெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், சவுந்தர்ய வல்லி தாயார் சமே தராய் ஹரிகிருஷ்ணபெருமாள், சந்தானபுஷ்கரணி திருக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்ப திருவிழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா ... கோவிந்தா ... என, கோஷமிட்டு பெருமாளை வணங்கி சென்றனர்.