உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில்  திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தின சிறப்பாக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில் 8-வது திருமுறையாக உள்ள மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 51 பதிகங்களையும், அதில் உள்ள 658 பாடல்களையும் செம்போதிநாதர் கோவில் ஓதுவார்கள் நேற்று காலை முதல் மதியம் வரை ஓதினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !