ரத்தினமங்கலத்தில் அட்சய திரிதியை குபேரர் வழிபாடு
ADDED :3117 days ago
வண்டலுார் : ரத்தினமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரர் திருக்கோவிலில், அட்சய திரிதியை நாளை முன்னிட்டு, சொர்ண அலங்காரத்தில் குபேரர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வண்டலுாரை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரர் திருக்கோவிலில், ’அட்சய திரிதியை’ வழிபாடு ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்நாளில், குபேரனை வணங்கினால், பணப்பற்றாக்குறை, கடன் மற்றும் தண்ணீர் கஷ்டம் தீரும் என்பது ஐதீகம். அந்த வகையில், இந்த ஆண்டும் அட்சய திரிதியை முன்னிட்டு, நேற்றும், இன்றும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. சிறப்பு கனகதாரா ஸ்தோத்திரம் நாள் முழுவதும் படிக்கப்பட்டு, பக்தர்களுக்கு நெல்லிக்கனி பிரசாதம் வழங்கப்பட்டது. லட்சுமி குபேரர், சொர்ண அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று, இறைவன் அருள் பெற்றனர்.