மகிழும் மகாலட்சுமி
ADDED :3120 days ago
யானையின் மத்தகத்தில் (முன் நெற்றி) லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனால், தினமும் கோவில் நடை திறந்ததும் கருவறை முன், யானைக்கு பூஜை நடத்தி சன்னதியை சுற்றி வரச் செய்வர். இதற்கு கஜ பூஜை என்று பெயர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம் மகிழும் என ஸ்ரீசூக்தம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி அவதரித்ததும், பூமியை தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கின. இவளை கஜ லட்சுமி என்பர். கஜம் என்றால் யானை. கஜலட்சுமி சிற்பத்தை கோவில் கருவறை நுழைவு வாயிலிலும், வீட்டில் தலைவாசலிலும் அமைப்பது வழக்கம்.