வந்தாள் மகாலட்சுமியே!
ADDED :3120 days ago
பாற்கடல் வந்த நாரதர், லட்சுமியிடம், தாயே! நீ எங்கெல்லாம் இருப்பாய்? எனக் கேட்டார், இதற்கு லட்சுமி, தினமும் விளக்கேற்றும் வீடு, துளசிமாடம், சங்கு, சாளக்கிராமம், தாமரை, தானியக்குவியல், தானம் செய்யும் இடம், பசுக்கொட்டில், தயாள குணம் கொண்டவர், இனிமையாகப் பேசுபவர், சுறுசுறுப்பு மிக்கவர், தற்பெருமை இல்லாதவர், சத்திய வழி நடப்பவர், எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தூய்மை காப்பவர், சாப்பிடும் போது ஈரக்காலுடன் அமர்பவர், ஈரக்காலை துடைத்துவிட்டு தூங்க செல்பவர், கூந்தலை பின்னி முடித்த பெண்கள் ஆகியோர் இருக்கும் இடங்களில் நிரந்தரமாக வசிப்பேன், என்றாள்.