மேலும் செய்திகள்
உலக நன்மைக்காக மகா சண்டி ஹோமம்
5077 days ago
பாலுார் லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் தேரோட்டம்
5077 days ago
தென்காசி : தென்காசி பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் நந்திக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்கார தீபாராதனை, சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வருதல் நடந்தது. சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தென்காசி குலசேகரநாதர் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தில் உலாவும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மேலச்சங்கரன்கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், இலஞ்சி குமாரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதனால் இக்கோயில்களில் மாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
5077 days ago
5077 days ago