ஹெத்தையம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்
ADDED :3187 days ago
குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர்திரு விழாவில், நேற்று ஹெத்தை யம்மன் அலங்காரத்தில் அம்மன் பவனி வந்தார். குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று படுக இன மக்களின் சார்பில் ஹெத்தை யம்மன் திருவிழா நடந்தது. அதில், குன்னுார் வி.பி., தெரு சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு வழிபாடுகளுடன் ஹெத்தையம்மன் அலங்காரத்தில் வலம் வந்த அம்மன், வி.பி., தெரு., மவுன்ட்ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை ஆகியவை நடந்தன. தொடர்ந்து, பஜனை , அன்னதானம் நடந்தது. படுக இன மக்கள் பாரம்பரிய நடனமாடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.